ஞாயிறு, 9 ஜனவரி, 2011

தமிழ் வரிசையான வள்ளுவம்

அகத்தை சொல்லா அறிவு மானிடற்கு
அழகாம் அதைசொல்பவன் ஞானியோ
ஆறு மடை திறந்ததுபோல் நல்லோரன்பு
ஆறா அவா அன்றோ
இயல்பு மாறும் அகத்தை சொல்லுதலும்
இயற்கைக்கு எதிரானதே சொல்லாதே
ஈட்டு பொருள் அனுபவி இயன்றமட்டும்
ஈட்டியது எட்டாக்கனி ஆகாது
உருகு உள் அகம் உரைக்காதே
உருகும் உன்னன்பு மேகமாகுமாம்
ஊசி போனது போல் ஆகும்பண்டம்
ஊரார்கும் பயன்படாது அறி
எழு காலையில் எண்ணிய நல்லதைசெய்ய
எமகண்டம்ராகுகுளிகைக்குள் நல்லநேரத்தில் முடித்துவிடு
ஏழு கடல் ஏழு மலை
ஏகும் தொலைவு இல்லை
ஒருங்காய் ஒற்றுமையாய் மனமாறுபாடுஇன்றி பணிசெய்
ஒன்றும் பேசவேண்டா நட்தருனத்தில்
ஓதும் அனைத்தும் உனக்காகவும் என்றறி
ஓதுவதை செவிகொடுத்து கேள்
ஒவ்ளாக்கியம் என்பதும் வள்ளுவமே படைபவனை
ஒவ்வா வார்த்தைகளால் வசையாதே
அக்தரித்து ஆசையகற்றி எல்லோரையும் நண்பனாகபாவித்து
அக்கறை கொள் அக்துஇனிதாம்
கவின்மிகு இறகாம் மயிலினது பஞ்சவர்ணக்கிளிபற்றி
கவி என்ன பாடுவானோ
காற்று புகா இடம் உண்டோ
காளி நீ அரிவையோ
கிடைப்பதை பகிர்ந்துண்டால் உன்முறை வரும்போது
கிடைக்கும் சந்தோசமே தனி
கீற்று பாளை இளநீர் தேங்காய்மரமென
கீறும்துடைப்பம் வரைதரும் தென்னைவளர்
கெட்டாள் தாசி கெடுமை செய்வாள்
கெட்ட சகவாசம் எதற்கு
கேட்டு கொடுப்பவன் முதலாளி கொடுப்பவன்
கேட்காமல் நண்பன் அவனிற்கீடுண்டோ
கையாளாகா மானிடன் வாழ்ந்து என்னபயன்
கைராசிகாரன் அருகே இருந்தும்
கொட்டிகொடுப்பவன் புனிதன் அவனுக்கென்று சான்தான்வயிறோ
கொள்ளவோன்னா சரிரமே வயிறோ
கோவலன் கண்ணகி சரித்திரம் தாசியால்
கோட்டி பிடித்து அழிந்தது
கொவ்வை செவ்வாயை நினைத்து கோவானாலும்
கொவ்வடி பிடிப்பது தீது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக