நிலத்தின் விளைச்சலுக்கு தரமான விதைகள் வழங்கபடுவதில்லை என்பது ஒரு கரரனமாய் இருக்கலாம் அல்லது நிலம் தன் இயல்பை இழந்திருக்கும் அதற்கு என்ன செய்வது. ஒவ்வொரு விவசாயியும் தன் நிலத்தை ஐந்து அடிக்கு பொக்லைன் வைத்து தோண்டி மேலுள்ள தரமற்ற மண்ணை அகற்றிவிட்டு அடியில் உள்ள மண்ணை மேலே பரவசெய்து நிலம் சமமாக அமைய செம்மண்ணை வாங்கி அடியிலும் உள்ளே உள்ள மண்ணை மேலேயும் வைத்து புல்டோசெர் கொண்டு சமம் செய்து நிலத்தை பதப்படுத்தி மீண்டும் விவசாயம் செய்ய நிலத்தை தயார் செய்ய வேண்டும். இதற்காகும் செலவை பற்றி கவலைகொள்ள தேவை இல்லை பணத்தை எந்த பணக்கரனாலும் திண்ண முடியாது அவரவர்கள் தங்களுக்கு தெரிந்த பணமுடையோரிடம் பெற்று விளைச்சலில் கிடைக்கும் தானியத்தில் அவர்கள் கொடுக்கும் பணத்தின் மதிப்பளவு கொடுத்து தங்கள் நிலங்களையும் விவசாயத்தையும் காப்பாற்றி கொள்ள வேண்டியது ஒவ்வொரு விவசாயியின் கடமை. இல்லையேல் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்
மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கன் இடர்பாடு உடைத்து
ஏர் முனையை காட்டிலும் வல்லியது
ஏகரா பேனாமுனைகூட அன்று.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக