சனி, 4 செப்டம்பர், 2010

கண்ணுறுதல்

கண்ணுறுதல் மனதிற்கு நன்றாம் யாவும்
கற்றுற ஐயமின்றி செயல்பட
கண்ணே தேகத்தின் சிரசிற்கும் யாவுக்கும்
காரணம் ஊறின்றி காத்தலவசியம்
கண்ணுருதலால் மனமகிழ்ச்சி சந்தோசம் எல்லாம்
களிக்க பயணம் நன்றாம்
வெகுவிரைவு பயணம் சுற்றியிருப்பதை கவனிக்ககொள்ளாது
வெகுகண் விழிதோம்பல் நன்று
உன்னை சுற்றியிருப்பதை அறி பிறகு
உன்னையும் அறிவர் பலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக